Daily Horoscope
✕

கோவை பாரதியார் பல்கலையில் AI படிப்பு.. மாணவர்கள் ஆர்வம்..!

Written By Mahendran
Updated: வியாழன், 9 மே 2024 (12:15 IST)
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கோர்ஸில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் முதுநிலை பட்டப்படிப்பில் சேர தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம் என்றும் கல்வி தகுதி, கட்டணம் ஆகிவை குறித்த விவரங்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது

இதனை அடுத்து மாணவர்கள் பலர் செயற்கை நுண்ணறிவு படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு படிப்பை படித்தால் எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்று மாணவர்கள் இந்த கோர்ஸ் சேர ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த படிப்புக்கு ஜூன் 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Edited by Mahendran

எல்லாம் காட்டு

பிரான்ஸில் மீண்டும் போராட்டம்.. 8 லட்சம் வரை மக்கள் பங்கேற்பு.. 1000 பேர் கைது...

மகன் கொடுத்த புகாரால் தலைமறைவான தாய்.. 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்..

6 வயதில் தான் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்: புதிய வயது வரம்பு நடைமுறை...

கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

கனமழை எச்சரிக்கை: நாளை எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? கல்வி அமைச்சர் தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments