Daily Horoscope
✕

அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பம்.. வெயில் அதிகமாக இருக்குமா?

Written By Siva
Updated: வியாழன், 4 மே 2023 (07:56 IST)
ஒவ்வொரு மாதமும் மே மாதம் அக்னி நட்சத்திரம் நிகழும் என்ற நிலையில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 29ஆம் தேதி முடிவடைகிறது என்றும் இந்த 25 நாட்களும் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு சூரியனின் வெப்ப கதிர்கள் சுட்டெரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் பகல் பொழுதில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிக அளவு தண்ணீர் குடித்டு, பழங்கள் மற்றும் நீர் சத்துள்ள காய்கறிகளை சாப்பிட்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
அக்னி நட்சத்திரம் இன்று முதல் ஆரம்பமானாலும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளதை அடுத்து புயல் வர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது எனவே புயல் கரையை கடக்கும் வரை அக்னி நட்சத்திரம் தாக்கம் குறைவாக இருந்தாலும் அதன் பிறகு மீண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்றும் மே 29ஆம் தேதி வரை பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

சென்னையில் ரோட் ஷோ செய்யும் பிரதமர் மோடி!.. ஏற்பாடுகள் தீவிரம்..

டெல்லி காவல் அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் கைது! எதிர்க்கட்சிகள் கண்டனம்..

3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. முழு விவரங்கள் இதோ..

போன வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவு.. இந்த வாரம் மீண்டு வந்ததால் நிம்மதி...

தனுஷின் இயக்கத்தில் இணைந்தாரா நாஞ்சில் சம்பத்?!.. அவரே சொன்ன விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments