வெயில் காலத்தில் பீர் குடித்தால் ஆபத்தா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
வெயில் காலம் என்றாலே ஜில்லென்று பீர் குடிப்பதை வழக்கமாக பலர் கொண்டுள்ளனர் என்பதும் அவ்வாறு வெயில் காலத்தில் பீர் குடிப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம் உடலில் உள்ள நீர்த்தன்மை தான் நம் உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் நிலையில் அதிக அளவு வியர்வை காரணமாக கோடைகாலத்தில் வியர்வை காரணமாக அதிக நீர் மற்றும் உப்புகளை இழக்கிறோம்.
இந்த நிலையில் ஒருவருக்கு நீர் இழப்பு ஏற்பட்டு விட்டால் நா வறட்சியாக இருக்கும் என்பதும் சோர்வு பசியின்மை ஆகிய பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதனை ஈடுகெட்ட அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்து வருகின்றனர்.
ஆனால் சில மதுப் பிரியர்கள் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக பீர் அதிகமாக குடித்து வருகின்றனர். வெயில் காலங்களில் பீர் அதிகமாக குடித்தால் பல்வேறு அபாயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக வெயில் காலங்களில் பீர் குடித்தால் ரத்தக்குழாய்களின் அளவு அதிகரித்து நீர் சத்துக்கள் அதிக அளவில் வெளியேறும் என்றும் போதையால் தாகம் இருந்தாலும் தண்ணீர் அருந்த கூடிய உணர்வு ஏற்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே வெயில் காலத்தில் ஜில் பீர் மட்டுமின்றி எந்த வகையான மதுபானங்களையும் தவிர்க்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் அறிவுரையாக உள்ளது.
Edited by Mahendran