திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 25 மார்ச் 2023 (21:15 IST)

கரூரில் உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் சார்பில் ஆகம தமிழ் எழுச்சி மாநாடு

karur
உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து கோயில்களிலும் தமிழிலேயே குடமுழுக்கு செய்வதற்காக வழிமுறைகளை வகுத்தளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை விரைவில் பெற்று அரசாணை வெளியிட வேண்டும் என  கரூரில் இன்று  உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற ஆகமத் தமிழ் எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.
 
கரூரில் உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் சார்பில் ஆகம தமிழ் எழுச்சி மாநாடு இன்று நடைபெற்றது.
 
இந்த, மாநாட்டை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி சுப்பிரமணியம், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். 

தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் தமிழ் ஆர்வலர்கள் தமிழில் வழிபாடு செய்வது, தமிழில் குடமுழுக்கு நடத்துவதின் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.

மாநாட்டில், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து கோயில்களிலும் தமிழிலேயே வழிபாடு நடத்தவும், தமிழிலேயே குடமுழுக்கு செய்வதற்காக வழிமுறைகளை வகுத்தளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை விரைவில் பெற்று அரசாணை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும், தாய் மொழி தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும்,  பள்ளி, கல்லூரிகளில் அனைத்து வகை பாடத்திட்டங களையும் தமிழில் உருவாக்க வேண டும், நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடுதல்,  8 வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்ணி மொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.