என்னை நீக்கிய பிறகு திமுக ஒருமுறைக்கூட வெற்றி பெறவில்லை: அழகிரி
கட்சியில் இருந்து என்னை நீக்கிய பிறகு திமுக எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதன் முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 28ம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி மு.க.அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி கூறியதாவது:-
கட்சியில் இருந்து என்னை நீக்கிய பிறகு திமுக எந்த தேர்தலிலும் ஒரு முறைக்கூட வெற்றி பெறவில்லை.
செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணிக்கு பிறகு மக்கள் என்னை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது தெரியும் என்று கூறியுள்ளார்.