திமுக-பாஜக கூட்டணிக்கு வாய்ப்பா? வைகோ பதில்

Last Modified வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (19:51 IST)
கடந்த சில நாட்களாகவே பாஜக-திமுக நெருங்கி வருவதாகவும் வரும் பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்வதை போல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதையும், திமுகவின் நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா கலந்து கொள்ள இருப்பதையும் அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உண்டா என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 'திமுக
நடத்தும்
கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பல்வேறு தேசிய கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதேபோல் பாஜகவுன் அமித்ஷா கலந்து கொள்ளவுள்ளார்.. இதனை வைத்து திமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்படும் என்று கூற முடியாது என்று கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் சென்னைக்கு வருகை தந்தபோது கருப்புக்கொடி காட்டிய திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதைவிட கேவலமான அரசியல் வேறு இருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :