செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (10:34 IST)

ஓவாரா பேசுனா.. எல்.முருகனை பதவி நீக்க வேண்டி வரும்!? – அதிமுக வார்னிங்!

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து எல்.முருகன் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்து தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

ஆனால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது குறித்து பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. கட்சி வேண்டுமானால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம். ஆனால் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்ற வகையில் அவர் பேசி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமையை அறிவித்துள்ளது. அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக கூறியிருந்தார். இந்நிலையில் வெளிப்படையாக எல்.முருகன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி “கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து எல்.முருகன் பேசி வந்தால், பாஜக தலைமை அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டி வரும்” என பேசியுள்ளார்.