வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (09:38 IST)

ஓட்டுக் கேட்க சென்ற இடத்தில் கமலிடம் ரசிகர் கேட்ட கேள்வி – வைரலாகும் வீடியோ!

நடிகர் கமல்ஹாசன் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தேர்தல் பிரச்சாரத்திலும் பிஸியாக இருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளாக அதை நடத்தி வந்து பாராளுமன்ற தேர்தலில் 3.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளார். கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அவருக்கான வாக்குகள் அதிகமாகக் கிடைக்கின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்தும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பிரசாரத்துக்கு சென்ற இடத்தில் கமலிடம் கூட்டத்தில் இருக்கும் தொண்டர் ஒருவர் ‘இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனிதா சம்பத் வெளியேறுவாரா?’ எனக் கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.