புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (07:49 IST)

தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்றத்தின் ஆயுள் முடிவடைவது எப்போது? தேர்தல் ஆணையம்!

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவையின் ஆயுள் காலம் முடிவடைவது எப்போது என்பது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே 24ம் தேதியுடன் சட்டப்பேரவையின் ஆயுள் காலம் முடிவடைவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் கேரளாவில் அடுத்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே 30ஆம் தேதியும், புதுவையில் அடுத்த ஆண்டு ஜூன் 8-ம் தேதியு, அசாமில் அடுத்த ஆண்டு மே 31 ஆம் தேதியும், சட்டப் பேரவைகளில் காலம் முடிவடைகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
இந்த ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவையின் ஆயுள் காலம் முடிவடைவதற்கு முன்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரை மார்ச் மாதம் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது