1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:12 IST)

சிறுவன் சுர்ஜித் மரணம் – ஊடகங்களிடம் பேச அமைச்சர்களுக்குத் தடை !

திருச்சி அருகே சிறுவன் சுர்ஜித் மரணம் அடைந்தது தொடர்பாக ஊடகங்களிடம் எதுவும் பேசக்கூடாது என அதிமுக தலைமை அமைச்சர்களுக்கு உத்தரவு போட்டுள்ளது.
 

அரசின் போதிய அறிவியல் கருவிகள் இல்லாத காரணமும் குழந்தையின் இறப்புக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அதிமுக தலைமையில் இருந்து அமைச்சர்களுக்கு வாய்வழி உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் அமைச்சர்கள் யாரும் சிறுவன் மரணம் தொடர்பாக ஊடகங்களிடம் எதுவும் பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

பேனர் விவகாரத்தில் அதிமுக அமைச்சர் பொன்னையனின் சர்ச்சைப் பேச்சு, நாங்குநேரி இடைத்தேர்தலில் ராஜேந்திர பாலாஜியின் சிறுபான்மையினருக்கு எதிரானப் பேச்சு ஆகியவற்றால் மக்கள் அதிமுக மீது கோபத்தில் உள்ளனர். அதனால் இம்முறையும் எதாவது சர்ச்சையைக் கிளப்பாமல் இருக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.