Daily Horoscope
✕

அதிமுக 4ம் கட்ட வேட்பாளர் பட்டியல்..! – கோவைக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (10:59 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 4வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் அதிமுக – பாஜக இடையே நேற்று முன்தினம் முதலாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. எனினும் இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து முடிவு எட்டப்படாத நிலையில் பாஜக தனித்து போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது அதிமுக தனது 4வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் அதிகமாக கோவை மாவட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அங்கு இடங்கள் ஒதுக்க பாஜக கேட்டு வந்ததாக பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் கூட்டணி முறிந்துள்ள நிலையில் தற்போது கோவை, திண்டுக்கல், திருவாரூர், திருப்பூர் மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

எல்லாம் காட்டு

மிருகக்காட்சிச்சாலைக்கு கணவருடன் சென்ற 18 வயது பெண் மாயம்.. 20 நாட்களுக்கு பின் நடந்த ஆச்சரியம்...

ஏஐ டெக்னாலஜியால் 90 சதவீத மக்கள் வேலை இழந்துவிடுவார்களா? ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை...

கிண்டில் பிரிவில் கை வைத்த அமேசான்... 250 ஊழியர்களின் வேலை காலி...

வாடா வாடா சண்டைக்கு வாடா!... சண்டை போட கட்டணம் வசூலிக்கும் சீன நபர்...

லேஸ் சிப்ஸ் பாக்கெட்டில் குறைந்த எடை!.. கேஸ் போட்டு 8 ஆயிரம் இழப்பீடு வாங்கிய நபர்...

அடுத்த கட்டுரையில்
Show comments