புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (10:57 IST)

அதிமுக 4ம் கட்ட வேட்பாளர் பட்டியல்..! – கோவைக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 4வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் அதிமுக – பாஜக இடையே நேற்று முன்தினம் முதலாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. எனினும் இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து முடிவு எட்டப்படாத நிலையில் பாஜக தனித்து போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது அதிமுக தனது 4வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் அதிகமாக கோவை மாவட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அங்கு இடங்கள் ஒதுக்க பாஜக கேட்டு வந்ததாக பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் கூட்டணி முறிந்துள்ள நிலையில் தற்போது கோவை, திண்டுக்கல், திருவாரூர், திருப்பூர் மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.