செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2018 (17:35 IST)

இது நியாயமா? இப்படி போஸ்டர் அடிக்கலாமா? - அதிமுக கலகல

அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் மரணமடைந்து விட்டது போல அதிமுகவின் அடித்துள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் நடத்தும் விழாக்களில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
 
அந்நிலையில், அதிமுகவின் அடித்துள்ள பல போஸ்டர்கள்  மற்றும் பேனர்களில் ஏராளமான குளறுபடிகள் நிகழ்ந்து வருகிறது. ஓரிடத்தில் பிப்.29ம் தேதி அன்று விழா எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு போஸ்டரில் புரட்சி தவைவியே என அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது.

இந்நிலையில், நெரிஞ்சிபேட்டை பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டரில்  “மறைந்த மாண்புமிகு செங்கோட்டையன், கே.சி.கருப்பணன்” என அமைச்சர்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. 
 
இதையும் சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.