அதிமுக எம்எல்ஏவுக்கு ஜெயலலிதா கொடுத்த மெகா பரிசு
அதிமுக எம்எல்ஏவுக்கு ஜெயலலிதா கொடுத்த மெகா பரிசு
உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
நடைபெற்ற சட்டசபை தேர்தலில், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிட்டனர். இதில், கள்ளகுறிச்சியில் பிரபு, உளுந்தூர்பேட்டையில் குமரகுரு மட்டுமே வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை படுதோல்வி அடையச் செய்து, டெபாசிட்டை காலி செய்த குமரகுருவுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை மெகா பரிசாக வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதனால், குமரகுரு ஆதரவாளர்கள் குஷியில் உள்ளனர்.