புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (14:00 IST)

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது..! – நீதிமன்றத்தில் புதிய மனு!

ADMK
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என பிரிந்து ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வரும் 28ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கப்பட்டால் அது கட்சியில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை மேற்கூறிய காரணங்களால் தடை செய்ய வேண்டும் என பெருந்துறை அதிமுக முன்னாள் இளைஞர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.