1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:28 IST)

சென்னை மாவட்ட செயலாளர்களுக்கு மட்டும் அழைப்பு? அதிமுக கூட்டத்தில் என்ன நடக்கும்?

இன்று நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரியவந்துள்ளது. 
 
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வர்ருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 
 
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. 
 
அதோடு நம்பவர் மாதம் கட்சி பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.