2021ஆம் ஆண்டு சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள்: எல் முருகன்
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடும் என்றும் 2021 ஆம் ஆண்டு சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் உறுதியாக இருப்பார்கள் என்றும் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்
மேலும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்றும் அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு மற்றும் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு திமுக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் பாஜகவுக்கு வருவார்கள் என்று அவர் கூறினார்
ஏற்கனவே பாஜக இல்லாமல் அதிமுக தனித்து தேர்தலை சந்திக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எல் முருகன் அவர்களின் இந்த கருத்துக்கு எதிர்ப்போ அல்லது ஆதரவோ அதிமுக தலைமை காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது