Daily Horoscope

மழை பெய்யல.. காத்து அடிக்கல!.. கரண்டு கட்டுக்கு காரணம் சொன்ன ஆதவ் அர்ஜுனா!...

Updated: செவ்வாய், 22 செப்டம்பர் 2026 (21:48 IST)
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாகவே சில மாவட்டங்களில் சில ஊர்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது. குறிப்பாக சென்னையின் சில பகுதிகளில் இரவு நேரங்களில் சில மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடி வருகிறார்கள்.

இதை கையிலெடுத்த திமுக தவெக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ‘தமிழ்நாட்டில் இரண்டு விஷயத்துக்குதான் போட்டி.. ஒன்று மின்வெட்டு.. மற்றொன்று அரிவாள் வெட்டு’என நக்கலடித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘மழை குறைந்ததால் தண்ணீரில் இருந்து வரும் மின்சாரம் குறைந்துவிட்டது. காற்று நின்று போனதால் அந்த மின்சாரமும் கிடைக்கவில்லை.. இதனால், வெளியே மின்சாரம் வாங்கும் நிலைக்கு சென்றுள்ளோம். கடந்த 5 வருடங்களில் மின் உற்பத்திக்கு எதுவுமே திமுக செய்யவில்லை’ என கூறியிருக்கிறார்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments