ஸ்டாலின் கொள்கை பிடிக்காது.. ஆனா அவரை மதிக்கிறேன்! – வாழ்த்து தெரிவித்த நடிகை கஸ்தூரி!

Mk Stalin
Prasanth Karthick| Last Modified திங்கள், 1 மார்ச் 2021 (12:43 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று பல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் நடிகை கஸ்தூரியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு பிறந்தநாளின்போது கொரோனா காரணமாகவும், முன்னாள் பொது செயலாளர் அன்பழகன் மறைவு காரணமாகவும் பிறந்தநாளை மு.க.ஸ்டாலின் கொண்டாடாத நிலையில் இன்று அவரது பிறந்தநாளுக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி “முன்னாடி ஒரு போலீஸ் கார். ரெண்டே ரெண்டு நிமிஷம் சாலையில் உள்ள வண்டிகளை கொஞ்சம் ஓரம் நிப்பாட்டுவார்கள். பாதசாரிகள் அவர்கள் பாட்டுக்கு செல்லலாம். அவ்வளவுதான். சைரன், சுழல் விளக்கு எதுவும் இல்லாமல், ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு சுருள் முடி சலசலக்க முன் சீட்டில் பயணிக்கும் ஸ்டாலினின் உருவம் இன்றும் என் மனக்கண்ணில் பளிச்சென்று தெரிகிறது.

இன்றும் , இத்தனை வயதிலும் கொரோனா காலத்திலும் அதே எளிமை, அதே சுறுசுறுப்பு. ஸ்டாலின் அவர்களின் கொள்கைகளை நான் ஏற்பவளில்லை. ஸ்டாலின் என்ற மனிதரை மிக மிக மதிப்பவள், வியப்பவள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மு.க.ஸ்டாலின்” என பதிவிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :