ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலே போராளிதான்.. கஸ்தூரியின் ஆதரவாளர் பேட்டி
நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கஸ்தூரியை வரவேற்று அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
பின்னர் பேட்டி அளித்த அவர்கள், "ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலே போராளிதான். ஒரு போராளிக்கு இன்னொரு போராளி தான் ஆதரவு கொடுக்க வேண்டும்," என்று கூறினர்.
கடந்த 10 ஆண்டுகளாக கஸ்தூரி நடிகையாக மட்டுமின்றி பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். மக்களுக்காக நேரடியாக போராட்டங்கள் நடத்தி வருகிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கஸ்தூரி ஜாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி அனைத்து சமூக மக்களுக்காக சமூக சேவை செய்து வருவதாக கூறிய ஆதரவாளர்கள், "அப்படிப்பட்ட ஒரு சிறந்த சமூக சேவையை செய்தவரை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்," என்றனர்.
"கஸ்தூரி இன்று விடுதலை ஆனது மகிழ்ச்சியான செய்தி. இந்த தீர்ப்பை நாங்கள் கொண்டாடுகிறோம்," என்று குறிப்பிட்ட அவர்கள், கஸ்தூரியின் விடுதலை பற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்களின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran