1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth.K
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (10:00 IST)

திருமா ரூட்டை பிடிக்கிறாரா விஜய்? தொலைபேசியில் வாழ்த்து!

Vijay Thiruma
நேற்று விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளில் அவருக்கு நடிகர் விஜய் போனில் தொடர்புக் கொண்டு வாழ்த்து தெரிவித்த சம்பவம் அரசியல்ரீதியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது.



நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த விவாதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதற்கேற்ப விஜய்யும் அரசியல் நுழைவுக்காக மெல்ல காய்களை நகர்த்தி வருகிறார். மாவட்ட அளவில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய விஜய், சமீபத்தில் அம்பேத்கர் சிலைகளுக்கு நற்பணி மன்றத்தினரை மாலை அணிவிக்க சொன்னது மேலும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில்தான் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளில் நடிகர் விஜய் அலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை, திருமாவுக்கு வாழ்த்து என விஜய்யின் நகர்வுகள் தலித் அரசியல் நோக்கிய நகர்வாக அமைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. விஜய்யின் அரசியல் பாதையும், கொள்கையும் அம்பேத்கர், திருமா, இடதுசாரிய வழிகளில் செயல்படுமா என்ற கேள்வியையும் இது ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K