பாலாஜி மனைவியிடம் பேசிய சிம்பு - கணவருடன் இணைவாரா நித்யா?

செவ்வாய், 27 மார்ச் 2018 (10:49 IST)
நடிகர் தாடி பாலாஜியை விட்டு பிரிந்திருக்கும் அவரது மனைவி நித்யாவிடம், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழுமாறு நடிகர் சிம்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 
நடிகர் தாடி பாலாஜி ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும், தன்னை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் புகார் கூறி அவரை விட்டு பிரிந்து சென்ற அவரின் மனைவி நித்யா தனது பெண் குழந்தையுடன் தற்போது அவரின் தாய் வீட்டில் தங்கியிருக்கிறார். இருவரும் இணைய பலர் முயற்சி எடுத்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. 

 
பல மாதங்களாக நடந்து வரும் இந்த பிரச்சனையில் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நடிகர் சிம்பு இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளார். தொலைப்பேசியில் நிதியாவிடம் நெடுநேரம் பேசிய சிம்பு  ‘எனக்காக பாலாஜியிடம் சேர்ந்து வாழுங்கள். அதன் பின்பும் அவர் மீது தவறு இருந்தால் உங்களுக்கு ஆதரவாக நான் நிற்பேன்’ எனப் பேசினாராம். 
 
ஆனாலும், நித்யா இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

எல்லாம் காட்டு

குழந்தைகளை விட நாய்களின் எண்ணிக்கை அதிகம்!.. ஜப்பானில் என்னதான் நடக்குது?...

தாய்லாந்த் பாராசைலிங்!. மேலிருந்து கீழே விழுந்து இறந்த நபர்!.. சோக வீடியோ!...

நான் தமிழரே இல்லையா? என்னுடைய பெயர் திருமாவளவன் இல்லையா? பொங்கி எழுந்த விசிக தலைவர்...

சிவசேனா போலவே சரத்பவார் கட்சியும் பாஜகவிடம் சரண்டரா? முதல்வரை சந்தித்த முக்கிய பிரபலங்கள்...

லஞ்சம் யாராவது கேட்டா உடனே போன் பண்ணுங்க.. வாட்ஸ் அப் நம்பரை கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை....

அடுத்த கட்டுரையில்
Show comments