கட்சி குறித்து முக்கிய அறிவிப்பு வரும்; ரஜினி வெளியிடுவார் என தகவல்!
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் ஓய்வில் உள்ள நிலையிலும் கட்சி குறித்த அறிவிப்புகள் திட்டமிட்டபடி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியிருந்தாலும் அவருக்கு ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் அவரது கட்சி தொடங்கும் பணிகள் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் ரஜினிகாந்த் ஓய்வில் இருந்தாலும் கட்சி தொடர்பான பணிகளை முழு வீச்சுடன் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும், டிசம்பர் 31ல் கட்சி பெயர், சின்னம் போன்றவற்றை திட்டமிட்டபடி வெளியிட உள்ளதாகவும், நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் காரணமாக ட்விட்டர் மூலமாக இவற்றை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.