1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (10:35 IST)

ஏற்கனவே பட்டது போதும்.. அரசியலுக்கு வர மாட்டேன்! – சிரஞ்சீவி அறிவிப்பு!

முன்னதாக அரசியல் கட்சி தொடங்கி பின்னர் அதை கலைத்த நடிகர் சிரஞ்சீவி தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல்களை எதிர்கொண்டு எம்.எல்.ஏ, எம்.பி உள்ளிட்ட பதவிகளை வகித்தார். பின்னர் திடீரென கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் அவர் சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளதோடு, மோகன்லாலின் மலையாள படமான லூசிபர் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ”மீண்டும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை. சினிமா மீது மட்டுமே எனது முழு கவனமும் இருக்கும்” என தெரிவித்துள்ளார். தனது சகோதரர் பவன் கல்யாணின் கட்சியில் கூட இணைய மாட்டேன் என உறுதியாக உள்ளாராம்.