1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (14:07 IST)

நடிகர் ரஜினிகாந்த்- அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு

LYCA
அமைச்சர் எ.வ.வேலு  நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
 
லைகா நிறுவனம் தயாரிக்கும்  லா லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த்  நடித்து வருகிறார். இந்த படத்தை ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்த படம் இந்தியில் வெளியான கை போ ச்சே என்ற படத்தின் லேசான தழுவல் என தகவல் வெளியானது. இப்படத்தின் ஷூட்டிற்காக திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

இதையடுத்து,  கடந்த ஜூலை 1 ஆம் தேதி  நடிகர் ரஜினிகாந்த் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.  கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் லால் சலாம் பட ஷூட்டிங்  நிறைவடைந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு  நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின்போது, சினிமா, அரசியல் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.