ரஜினியுடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை- காமெடி நடிகர்
நடிகர் ரஜினியுடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று காமெடி நடிகர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் லா லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்த படம் இந்தியில் வெளியான கை போ ச்சே என்ற படத்தின் லேசான தழுவல் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து காமெடி நடிகர் தங்கதுரை நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் மட்டுமே ரத்து வந்த ரஜினியை இவ்வளவு சீக்கிரத்தில் சந்திப்பேன் என்றும் அவருடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா எனக்கு முக்கிய கதாப்பாத்திரம் கொடுத்துள்ளார். ரஜினியுடன் நடித்தது என் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருப்பதுடன் , சினிமாவுக்கு வந்த நோக்கத்தையும் நிறைவேற்றிய சந்தோசத்தைக் கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.