வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (18:19 IST)

கால் லிட்டருக்கு 2.50 பைசா உயர்ந்ததா ஆவின் பால்??

மதுரையில் ஆவின் பாலகங்களில் பால பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் முழு ஊரடங்காக அடுத்த சில நாட்கள் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருளான பால் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பில் ஆவின் பால் நிறுவனம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பால் பெருமளவு விற்கப்படாத நிலையில், ஆவின் பால் விற்பனையே மகத்தானதாக உள்ளது. 
 
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மதுரை ஆவின் பாலகங்களில் ஆவின் தயாரிப்புகளுக்கு கால் லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசு வீதம் கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக பிரபல் ஆன்லைன் பத்தரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இதனால் மக்கள் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளதால், தகுந்த துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.