செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (14:59 IST)

ஜோதிகா விவகாரத்தில் ஆதரவளித்தாரா விஜய் சேதுபதி? பரவும் வதந்தி!

சமூகவலைதளங்களில் ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் பற்றி பேசிய கருத்துக்கு விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளதாக ஒரு பதிவு வைரலாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு முன்னால் நடந்த சினிமா விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றதாகவும், து பெரும் பொருட் செலவில் பராமரிக்கப்பட்டதாகவும், அதே சமயம் அருகில் இருந்த மருத்துவமனை பராமரிப்பின்றி மோசமாக இருந்ததையும் கண்டு வருந்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் கோவில்களுக்கு ஏராளமான செலவுகளை செய்வதை காட்டிலும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு செலவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ இப்போது வைரலாக பலரும் ஜோதிகாவின் கருத்துக்கும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஜோதிகாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறி ‘ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது’ என அவர் பெயரில் ஒரு சமூகவலைதளப் பதிவு வெளியானது.

ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்று விஜய் சேதுபதி தனது சமூகவலைதளப் பக்கத்தில் Fake என்று அந்த பதிவைப் பற்றி கூறியுள்ளார்.