1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (10:59 IST)

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு..! ரூ.2 முதல் ரூ.5-ஐ வரை அதிகரிப்பு..!!

Avin Ice Cream
ஆவின் ஐஸ்கிரீம் விலை இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும்‌ ஆவின்‌ நிறுவனம்‌ நாளொன்றுக்கு சுமார்‌ 31 லட்சம்‌ லிட்டர்‌ பாலும்‌ மற்றும்‌ 200 க்கும்‌ மேற்பட்ட பால்‌ உபபொருட்களை விற்பனை செய்து வருகிறது.

ஆவின்‌ நெய்‌ மற்றும்‌ வெண்ணெய்‌ வகைகள்‌ மிகுந்த தரத்துடன்‌, குறைந்த விலையில்‌ விற்பனை செய்யப்படுவதால்‌ பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, அதன் தேவையும் அதிகரித்து வருகிறது.

 
இந்நிலையில் ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் சாக்கோபார், BALL வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.