செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (18:35 IST)

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

Gujarat Poster

பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க அகமதாபாத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் இந்த வன்கொடுமை சம்பவங்களை தடுக்க கடுமையான தண்டனைகள், பல பகுதிகளில் சிசிடிவி கேமரா, உடனடி போலீஸ் உதவி எண் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதில் பாலியல் வன்கொடுமை நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் பெண்கள் நள்ளிரவு விருந்துகளுக்கு செல்லக் கூடாது. இருட்டான மற்றும் தனியான இடங்களுக்கு நண்பர்களோடு செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சுவரொட்டிகள் போக்குவரத்து காவல்துறையால் ஒட்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதை காவல்துறை மறுத்துள்ளது. தங்களிடம் அனுமதி பெறாமல் தன்னார்வல அமைப்பு இதை ஒட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K