திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (14:52 IST)

இலவச மின்சாரம், மாதம் ரூ.1000 உதவி! – ஆஃபர்களை அள்ளி வீசும் ஆம் ஆத்மி!

பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் தேர்தலுக்கான வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள்ளாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.

டெல்லியில் மட்டுமே ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் தனது ஆட்சியை நிறுவ மிகுந்த பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாபில் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டி பலமான ஆஃபர்களை தேர்தல் வாக்குறுதிகளாக ஆம் ஆத்மி அறிவித்து வருகிறது.

அந்த வகையில் 24 மணி நேரம் இலவச மின்சாரம், 16,000 மொஹல்லா க்ளினிக்குகள் அமைத்து இலவச மருத்துவ சிகிச்சை அளித்தல், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.