1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (22:34 IST)

''குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு போட்டி இந்த ஒரே கட்சிதான்-'' கெஜ்ரிவால் பரப்புரை

kejriwal
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும், அம்மாநிலத்திற்கு டிசம்பர் 1ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.  இந்த தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய மும்முனைப் போட்டி இருக்கும் நிலையில் மூன்று கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியைப்கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி குஜராத் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தி ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால்  தற்போது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், இத்தேர்தலில், பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும்  இடையேதான் போட்டி இருக்கப் போகிறது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்று கெஜ்ரிவால் இன்றைய பிரசாரத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
Edited by Sinoj