ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 2 மே 2018 (09:10 IST)

சிம்கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை: அதிரடி அறிவிப்பு

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியம் என்றும், அந்த ஆதார் அட்டையை மொபைல் போன் உள்பட அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
 
இந்த நிலையில் புதிய சிம்கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்றும், வேறு ஏதேனும் ஆவணங்கள் கொடுத்தும் சிம்கார்டை பெற்று கொள்ளலாம் என்றும் மத்திய தொலைத்தொடர்புத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
மத்திய தொலைத்தொடர்புத்துறையின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். இதுவரை ஆதார் அட்டை இல்லாதவர்கள் சிம்கார்டே வாங்க முடியாத நிலை இருந்தது. தற்போது அந்த பிரச்சனை நீங்கிவிட்டதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.