1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (13:40 IST)

என்ன ஒரு வேகம்: பிறந்து 2 நிமிடமே ஆன குழந்தைக்கு ஆதார் அட்டை

இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயம் என்றும், ஆதார் அட்டையை அனைத்து முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
 
இருப்பினும் இன்னும் பலர் ஆதார் அட்டையை எடுக்காமல் உள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 18ஆம் தேதி பிறந்த ஒரு குழந்தைக்கு பிறந்த 1.48 நிமிடத்திற்குள் ஆதார் அட்டை கிடைத்துவிட்டது.
 
இந்தியாவின் இளைய குடிமகள் என்ற பெருமையை பெற்றுள்ள அந்த குழந்தையின் தந்தை இதுகுறித்து கூறியதாவது, 'என்னுடைய நண்பர்கள் மற்றும் ஆதார் அட்டை அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து பிறந்தவுடனே எனது குழந்தைக்கு ஆதார் அட்டை கிடைக்க ஏற்பாடு செய்திருந்தேன். அதன்படி குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே பெற்றோர்களின் ஆதார் அட்டை எண்கள் மற்றும் குழந்தையின் புகைப்படத்தை ஆதார் விண்ணப்பிக்கும் இணையதளத்தில் அப்லோடு செய்தேன். அடுத்த நிமிடமே என் குழந்தைக்கு ஆதார் கிடைத்துவிட்டது என்று கூறினார்.
 
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆதார் அட்டை பெற கைரேகை, கருவிழிப் படலம் ஆகியவை தேவையில்லை என்பதும். குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் எண்கள் ஆகியவை போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.