திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (15:04 IST)

காதலியை பார்க்க பர்தா அணிந்து சென்ற இளைஞரால் பரபரப்பு

Love
கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலியை சந்திக்க பர்தா அணிந்து சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது.

இந்தக் கல்லூரி வளாகத்தில் ஒரு இளைஞர் பர்தா அணிந்து கொண்டு சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி வருவதாக அங்குள்ள காவலாளிகள் அந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் தன்  காதலியைப் பார்க்க  இந்த வேடத்தில் வந்தது தெரிந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த இளைஞருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.