கழிப்பறையில் வீசப்பட்ட குழந்தை... .தலைமறைவான மருத்துவர் !
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் அருகே தனியார் மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தையைக் கழிப்பறையில் மறைத்துவைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் என்ற பகுதியில் வசிப்பவர் பீர் முகம்மது இவரது மனைவி ஷிஃபனா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, நெய்யூர் சிஎஸ் ஐ மருத்துவமனையில் இரவு நேரத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல், பயிற்சி மருத்துவர்தான் மற்றும் செவிலியர் பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது.
இதில், குழந்தை இறந்து பிறந்துள்ளது. அதனை மறைப்பதற்காக குழந்தையை கழிப்பறையில் அந்தத் தம்பதியர் வீசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், மருத்துவர் தலைமறைவானதாகவும், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Edited by Sinoj