வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (06:53 IST)

தமிழில் தேசிய கீதம் பாடிய ஆசிரியை: குவியும் கண்டனங்கள்

தேசிய கீதம் என்றாலே அது இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய ‘ஜன கன மன’ பாடல்தான். இந்த நிலையில் இந்த பாடலை தமிழில் மொழி பெயர்த்து ஆசிரியர் ஒருவர் பாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மொழிபெயர்ப்பு பாடலுக்கு ஆதரவும் கண்டனங்களும் குவிந்து வருகிறது

இனங்களும், மொழிகளும் பல இருந்தும் மனங்களில் பாரத தாயே !.. வடக்கே விரிந்த தேசாபிமான தெற்கில் குமரியில் ஒலிக்கும்.. இன மத வேற்றுமை உடைகளில் இருந்தும் இதயத்தில் ஒற்றுமை பொங்கும்’ என தேசிய கீதத்தை மொழி பெயர்த்துள்ள அந்த ஆசிரியை, ’இது அப்படியே நம் தேசிய கீதத்துக்குத் தமிழ் மாற்று எனச் சொல்லிவிட முடியாது. எனினும், அர்த்தங்களின் அடிப்படையில் மொழிபெயர்த்து இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

இந்த பாடலுக்கு ஒருசிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், சட்டப்படி இது தவறு என்றும், தமிழில் ஒரு தேசபக்தி பாடல் என்று வேண்டுமானாலும் இதனை சொல்லலாம் என்றும் தேசிய கீதம் என்று இந்த பாடலை சொல்ல கூடாது என்றும் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேசியகீதத்தின் ஒரிஜினலை அப்படியே விட்டுவிடுங்கள், அதில் கைவைக்க வேண்டாம்’ என்பதே பலரது குரலாக உள்ளது.