ஆசிரியருக்கு கொரொனா தொற்று வர பிரார்த்திக்கும் மாணவன்...வைரல் வீடியோ
தன்னை அடித்த ஆசிரியருக்கு கொரொனா தொற்று வர வேண்டுமென கடவுள் முருகனிடம் ஒரு மாணவன் பிரார்த்திக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில்,ஏ.பி,சி,டி எத்தனை எழுத்துகள் என ஆசிரியர் கேட்டதாகவும் அதற்கு 4 எழுத்துகள் எனக் கூறியதால் அடித்ததாகவும் அதனால் ஒன்று அந்தப் பள்ளியில் அவர் இருக்க வேண்டும் இல்லையென்றால் தான் இருக்க வேண்டும் என்று கூறி, அவருக்கு கொரொனா தொற்று வர நீ ஏற்பாடு செய்தால் உனக்கு மூன்றாவது திருமணம் செய்து வைக்கிறேன் முருகா என மாணவர் பிரார்த்திக்கிறார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.