செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (22:46 IST)

நடிகை திரிஷாவுக்கு கொரொனா தொற்று உறுதி!

இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட நடிகர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தற்போது,நடிகை திரிஷாவுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான திரிஷா முன்னணி  நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில்   ஒரு பதிவிட்டுள்ளார். அதில், புத்தாண்டுக்கு சியல் நாட்கள் முன்பு கொரொனாவால் பாதிக்கப்பட்டதாகவும், தடுப்பூசியால் குணமடைந்து நன்றாக இருப்பதுபோல் உணர்வதாகவும் விரைவில் குணமடைந்து வீட்டிற்குத் திரும்புவேன் எனத் தெரிவித்துள்ளார்.