வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 டிசம்பர் 2021 (16:16 IST)

நடிகர் விக்ரமுக்கு கொரொனா தொற்று உறுதி! படப்பிடிப்பு பாதிக்குமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரமுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவர் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, துருவ நட்சத்திரம், துருவுடன் இணைந்து மகான்  உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்கள் விரையில் ரிலீஸாக உள்ள நிலையில் சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,   இன்று நடிகர் விக்ரமுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரையில் குணமடைய ரசிகர்கள் ஹேஸ்டேக் பதிவிட்டு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும் மகான்,கோப்ரா உள்ளிட்ட  படப் பணிகள் பாதிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், விரைவில் அவரது படங்கள் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.