திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (12:04 IST)

இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த குழுக்கள் அமைப்பு : முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே
 
குறிப்பாக தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத வகையில் ஊரடங்கின் விதிமுறைகள் உள்ளது என்பதும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்டிப்பாக இபாஸ் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இபாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த குழுக்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இபாஸ்  நடைமுறையில் சிக்கல் என தன்னிடம் ஏற்கனவே முறையீடுகள் வந்ததாகவும் இதனை அடுத்தே இபாஸ் நடைமுறையை எளிமையாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மாதம் ஒரு முறை இபாஸ் இனி புதுப்பித்தால் போதுமானது என்றும் வெளிமாநில தொழிலாளர்களை தாராளமாக பணிக்காக அழைத்து வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இனி பாஸ் கெடுபிடிகள் அதிகம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது