Daily Horoscope
✕

கல்லூரி மாணவர்களிடையே நடந்த பயங்கர மோதலில் அரிவாள் வெட்டு.. பரபரப்பான வீடியோ

Updated: செவ்வாய், 23 ஜூலை 2019 (17:06 IST)
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதல்கள் அதிமாகி கொண்டு வரும் நிலையில் தற்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள், ஒரே பேருந்தில் கோயப்பேடு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினரிடையே யார் ரூட்டு தல என்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியது. இதனைத் தொடர்ந்து மறைத்துவைத்திருந்த அரிவாள், பட்டாகத்தி ஆகிய ஆயுதங்களை  எடுத்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்க ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவரை தாக்கிகொண்டனர். இந்த சம்பவத்தை பார்த்த மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

இந்த மோதலை பற்றி தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட சில மாணவர்களை கைது செய்தனர். இந்த மோதலில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த மாணவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,. இந்த மோதலில் கடுமையாக காயம் அடைந்து உயிருக்கு போராடிகொண்டிருக்கும் வசந்தகுமார் என்னும் மாணவரை மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால், அரும்பாக்கம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments