செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (11:09 IST)

ரவுண்டு கட்டி அடி பலமோ...? நேரடியாக வந்து பேட்டி அளித்த ஆ.ராசா !!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேட்டியளித்தது பின்வருமாறு... 
 
கடந்த 3ம் தேதி தன்னுடைய தகுதியை மறந்து, படிக்காதவரைப்போல 2ஜி வழக்கு குறித்து பேசியதற்காகவே அன்றைய தினம் கோட்டைக்கு வருகிறேன் எனக் கூறினேன். இன்றுவரை அந்த சவாலுக்கு எந்த பதிலும், அழைப்பும் வரவில்லை. என்னை விமர்ச்சித்தும், திமுகவை விமர்சித்தும், அதிமுகவினரும், அவர்களைச் சார்ந்தவர்களும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
 
முதல்வர் அழைக்காவிட்டாலும், மக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தவே திறந்த மடலை எழுதியிருக்கிறேன். கடந்த 3ம் தேதி எந்த முகாந்திரம் இல்லாமல் 2ஜி விவகாரத்தில் முதல்வர் குற்றச்சாட்டு வைத்தார்.
 
அன்று மாலையே 2ஜி விவாகரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்தேன். மேலும் அதுகுறித்து விவாதம் நடத்த தயார் என்றும் சவால் விடுத்தேன். அதுகுறித்து இதுவரை முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆனால் வெவ்வேறு ஆட்கள் மூலமாக என்னை, திமுகவை விமர்சித்தும், கொடும்பாவி எரித்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
முதல்வர் என்னை அழைக்கவில்லை என்றாலும் பொதுமக்களிடம் இதுகுறித்து விவரிக்க கடமை பட்டுள்ளேன். 2ஜி விவகாரத்தில் 7 வருட வழக்கு நடத்தப்பட்டு எந்தவித ஆதாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கி உள்ளது. 2ஜி வழக்கு நேர்த்தியாக ஜோடிக்கப்பட்ட வழக்கு.
 
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள். இதில் ஜெயலலிதா தவிர மற்ற அனைவரும் சாதாரண மக்கள். அவர்கள் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா அப்படி இல்லை. அவர் அரசியல் சட்டத்தில் கூறப்படும் அனைத்து உயரிய கருத்துகளுக்கு மாறாக ஜெயலலிதா நடந்து கொண்டுள்ளார்.
 
உச்சநீதிமன்றம் நீதிபதியே, அரசியல் சட்டத்திற்கு எதிரான ஒரு கொலையை குற்றவாளி செய்திருக்கிறார் என கூறியுள்ளார். காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தாலும், திமுக பொதுக்குழு கூட்டத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு குறித்தும் பேசுவோம். எனக்கு தகுதி இல்லாத யாருடனும் நான் விவாதம் நடத்த மாட்டேன். 
 
முதல்வர் மௌனதுக்கு, அவருடைய இயலாமையை காட்டுகிறது. அவர் முதல்வராக வந்தது ஏற்புடையதல்ல, அவர் ஆட்சி நடத்தும் விதம் ஏற்புடையதல்ல. ஆனால் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதால் அவரை நான் மதிக்கிறேன். நாளை நீலகிரியில் நிகழ்ச்சி நடந்தாலும் அவரை மாண்புமிகு முதல்வர் என்று தான் அழைப்பேன்.
 
எனவே ஒரு தகவல் கூறுவதற்கு முன்பு, அவர் கவனமாக பேச வேண்டும் என்றும், முதல்வர் தன்னுடைய பதிவியரிந்து வார்த்தைகள் விட வேண்டும் என்றார் பாஜக 2ஜி வழக்கில் நிச்சயம் மேல்முறையீடு செல்வார்கள். அதுகுறித்து எந்த அச்சமும் எனக்கு இல்லை. அண்ணா மறைவிற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் முறைப்படி தேர்ந்தெடுத்து  கருணாநிதியை முதல்வராக்கினார். ஆனால் எடப்பாடி அப்படி முதல்வர் ஆகவில்லை.
 
மக்கள் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அதை கண்டுபிடிக்க அரசு ஏன் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது? ஜெயலலிதா எந்த கட்சி என்று நாங்கள் பார்க்கவில்லை. அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது இறந்துள்ளார். அவர் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. எனவே திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதில் உள்ள உண்மையை வெளியில் கொண்டு வருவோம்.
 
எல்லா அமைச்சர்கள் ஊழல் குறித்த விவரம் எங்களிடம் உள்ளது. அதை முன்னிறுத்தி வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். ஒரு கட்டத்திற்கு மேல் காங்கிரஸ் கையாலாகாத தனமாக 2ஜி வழக்கில் ஒதுங்கி கொண்டது.  தகுதியற்றவர்களுடன் நான் விவாதிக்க மாட்டேன். பபூனுடன் (கோமாளி) நான் விவாதத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.