செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (13:15 IST)

எதிர்காலத்தின் தலைமைக்கான ஏற்பு தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது: ஆ ராசா

a raja
எதிர்காலத்தின் தலைமைக்கான ஏற்பு தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது என திமுக இளைஞரணியின் அமைப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசினார்.
 
திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது, ‘நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒற்றை செங்கலை காட்டி பரப்புரை செய்தவர் உதயநிதி, நீட் எதிர்ப்பு, இந்தி திணிப்புக்கு எதிராக உதயநிதியும், திமுக இளைஞரணியினரும் போராட்டம் நடத்தினர்
 
கட்சி பணியிலும், ஆட்சி பணியிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உதயநிதி மேற்கொண்ட செங்கல் பிரசாரத்தை எதிர்கட்சிகளே மறக்கவில்லை. சேப்பாக்கம் தொகுதியை விட மற்ற தொகுதிகளில் அதிக பிரசாரம் மேற்கொண்டார் உதயநிதி. 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தை நடத்தி காட்டினார் உதயநிதி
 
இதனையடுத்து பேச வந்த ஆ ராசா, எதிர்காலத்தின் தலைமைக்கான ஏற்பு தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது என்று கூறினார்,
 
Edited by Mahendran