1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (19:42 IST)

நான் அரசியல்வாதிதான்…அரசியலுக்கு வருவது புதிதல்ல – நடிகர் விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவர், தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது நடிகர் விஷால், ''அரசியல் என்பது சமூக சேவைதான். ஒரு அரசியல்வாதி ஏன் தேர்வு செய்யப்படுகிறார். அவர் 10 ஆயிரம் முதல் லட்சக்கணக்கான நபர்களால் பிரதிநிதியாக தேர்வு  செய்யப்படுகிறார். அப்படி தேர்வு செய்யப்படும் அவர் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இது பிசினஸ் கிடையாது பணம் சம்பாதிக்க…பிரதமர் முதற்கொண்டு எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. நான் எப்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன் ''என்றார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''அரசியல்வாதிகள் நடிக்கும்போது, நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை'' என்று கூறினார்.