வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (16:19 IST)

ஆபாச தளத்தில் நடிகையின் நம்பர்: பீட்ஸா பாய் செய்த வேலை!

பிரபல நடிகையின் வீட்டுக்கு பீட்ஸா டெலிவரி செய்ய சென்ற நபர் நடிகையின் எண்ணை ஆபாச தளத்தில் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு நடிகையான காயத்ரி ராவ் என்பவர் சென்னையில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு டோமினோஸில் இவர் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். அதை கொடுக்க பரமேஸ்வரன் என்ற நபர் வந்துள்ளார். பீட்ஸாவை டெலிவரி செய்வதற்காக அடிக்கடி கால் செய்து காயத்ரியிடம் பேசியுள்ளார்.

பீட்ஸாவை டெலிவரி செய்தபோது காயத்ரிக்கும், டெலிவரி பாய் பரமேஸ்வரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பரமேஸ்வரன் ஆபாச வாட்ஸப் குழு ஒன்றில் காயத்ரி ராவ் எண்ணை ஷேர் செய்துள்ளார். இதனால் பலர் காயத்ரி எண்ணுக்கு கால் செய்வதும், ஆபாசமாக பேசுவதும், குறுஞ்செய்திகள் அனுப்புவதுமாக இருந்துள்ளனர்.

அதில் ஒருவரிடம் எனது எண் எங்கிருந்து கிடைத்தது என காயத்ரி கேட்க அவரும் பரமேஸ்வரன் குழுவில் பகிர்ந்ததாய் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து பரமேஸ்வரன் மற்றும் இன்னும் சிலர் மீதும் காயத்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீஸார் பரமேஸ்வரனை பிடித்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து டோமினோஸ் நிறுவனத்துக்கு காயத்ரி ராவ் புகார் அளித்திருந்ததால் அவர்கள் பரமேஸ்வரனை வேலையை விட்டு நீக்கியுள்ளனர்.