வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஜூன் 2019 (13:49 IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது !

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருமலை எஸ்டேட் முதல் டிவிசனில் சுடலை என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்துவந்தார். இவரும் இவரது மனைவியும் நேற்று பணிக்குச் சென்றுவிட்டனர்.
அப்போது அவர்களது இளைய மகள்(12), பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் ரூபன் என்பவர்(49), அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்ல் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து சிறுமியின் தந்தை சுடலைமணி என்பவர் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இப்புகாரின் அடிப்படையில் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட ரூபனை போலீஸார் கைதுசெய்து, போக்சொ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.