மாமனாரிடமே ரூ.35 லட்சம் சம்பளம் கேட்ட சமந்தா?

Last Modified ஞாயிறு, 2 ஜூன் 2019 (09:52 IST)
மாமனார் நாகார்ஜூனா தயாரிக்கும் படம் ஒன்றில் ஐந்து நிமிட சிறப்பு தோற்றத்தின் கேரக்டர் ஒன்றில் நடிக்க மருமகள் சமந்தா ரூ.35 லட்சம் சம்பளம் கேட்டதாக டோலிவுட்டில் ஒரு வதந்தி பரவி வருகிறது
தெலுங்கு பிரபல நடிகர் நாகார்ஜூன் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் 'மன்மதுடு 2'. இந்த படத்தின் படப்ப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய கேரக்டரில் சமந்தாவை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றும் காட்சி என்றாலும் இந்த கேரக்டர் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேர்கடர் என்பதால் சமந்தா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மாமனாரின் பேனரில் தயாராகும் படம் என்று தெரிந்தும் இந்த கேரக்டரில் நடிக்க சமந்தா ரூ.35 லட்சம் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை
ராகுல் ரவீந்திரன் இயக்கும் இந்த படத்தில் நாகார்ஜூனா, ரகுல் ப்ரித்திசிங், கிஷோர், நாசர், தேவதர்ஷினி, அக்சரா கவுடா உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்து வருகிறார். இந்த படம் நாகார்ஜூனா நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'மன்மதுடு' படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :