1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 25 மே 2024 (18:55 IST)

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

சுங்கன்கடை அடுத்த பனவிளை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் நாகராஜன் (வயது 38). 
 
இவர் அதே பகுதியை சேர்ந்த 15- வயது சிறுமியிடம் ஆபாச செய்கைகள் காட்டியும், ஆபாச வார்த்தைகள் பேசியும் உள்ளார். இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
 
இதனால் மன உளைச்சலடைந்த சிறுமி அடுத்த நாள் பார்வதிபுரத்தில் தான் படிக்கும் பள்ளியில் வைத்து தனது கைகளை  பிளேடால் வெட்டிதற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
பள்ளியின் ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
 
இந் நிலையில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வழக்கு இரணியல்காவல் நிலையத்திற்க்கு மாற்றபட்டது. 
 
இந்த நிலையில் இரணியல் காவல் ஆய்வாளர் பத்மாவதி நேற்று சுங்கான்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
 
அப்போது சுங்கான்கடை பஸ்டாப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை செய்த போது அவர் சிறுமி வழக்கில் போலீசார் தேடி வந்த நாகராஜன் என்பது தெரியவந்தது.
 
அவரை இரணியல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர் நாகராஜன் மீது போஸ்கோ சட்டபிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.