ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2019 (14:27 IST)

தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் : மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. வெடிகுண்டுவெடிப்பு தாக்குதலால் இலங்கையில் சோகமயமாக காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேசமயம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு  ஆறுதல் கூறி வருகின்றனர்.

 
இந்நிலையில், நேற்று  இலங்கை குண்டுவெடிப்பு சம்பந்தமாக கேரளாவைச் சேர்ந்த இருவரிடம் தேசிய புலனாய்வு  முகமை விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியானது. இவர்கள் மீதான சந்தேகம் உறுதியானால் 2 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகின.
 
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒருவர்  இலங்கையைப் போல் தமிழகத்திலும் குண்டுவெடிக்கும் என்று பேசிய வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அந்த வீடியோவில் அந்த நபர் : இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில் வெடுகுண்டு தாக்குதல் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலையில் தொலைபேசியில் பேசிய நபர், தனது பெயரை சி.எம். சாமி என்று அறிமுகம் செய்யத்தொடங்கி பிறகு கூறியதாவது : இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடக்கும். இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ராமராதபுரத்திலிருந்து தான் ஆட்கள் சென்றனர் என்று தெரிவித்தார். இதற்கு தற்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
இதுகுறித்து மதுரை போலீஸார் தீவிரமாக விசாரித்த போது சி.என்.சாமி என்பவர் இதுபோல் சமூக வலைதலங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளதை கண்டுபிடித்தனர். சமூக வலைதலங்களில் இந்த வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.